Published : 31,May 2020 03:44 AM

ஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்? முழு விவரம்!!

Epass-details-in-tamilnadu-lockdown-5-0-updates

தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மத்திய அரசின் அறிவிப்பின் படி ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கும். மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை தொடரும். போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இ பாஸ் முறைகள் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது

image

மண்டலம் 1 கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் , பெரம்பலூர், மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம்
மண்டலம் 6தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

image

இபாஸ் முறை:

  • அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இ பாஸ்
    தேவையில்லை
  • வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரவும் மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும்
    இபாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்
  • மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இபாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இபாஸ் அவசியமில்லை

ஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்? முழு விவரம்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்