[X] Close

கிரிக்கெட் தோல்வி: இந்திய வீரர்கள் உருவப் பொம்மை எரிப்பு

india-loses-Champions-Trophy-final--Cricket-fans-reaction

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களின் உருவப் பொம்மையை ரசிகர்கள் நேற்று எரித்தனர்.


Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி 338 ரன்கள் குவித்தது. இந்திய அணி 158 ரன்களில் ஆட்டம் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். பல இடங்களில் ரசிகர்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். கான்பூரில் கேப்டன் விராத் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களின் புகைப்படங்களை தீயிட்டுக் கொளுத்தி ரசிகர்கள் தங்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close