Published : 30,May 2020 06:30 AM

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 900 பேருக்கு கொரோனா : விஜயபாஸ்கர்

vijayabaskar-said-about-lockdown

சென்னையில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புளியந்தோப்பில்1700 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

image

அப்போது பேசிய அவர், “கொரோனா பரவலை தடுக்க இனிவரும் நாட்களில் சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும். அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 கர்ப்பிணி பெண்கள் குன படுத்தப்பட்டு உள்ளார்கள்".

image

மேலும் தொடர்ந்த அவர் "ராயபுரம் மண்டலத்தில் அதிக கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை பார்த்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும்.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்