Published : 30,May 2020 05:45 AM

அதிகரிக்கும் உயிரிழப்பு: சென்னையில் இன்று 7 பேர் உயிரிழப்பு

coronavirus-death-in-chennai

சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்image

தமிழகத்தில் நேற்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 618 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 765 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் அளவு 55.87 சதவிகிதமாகப் பதிவாகி உள்ளது.

image

இந்நிலையில் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சென்னை கொசப்பேட்டையை சேர்ந்த 78 வயது மூதாட்டி, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 50 வயது பெண், 37 வயது ஆண் ஆவர்

மேலும், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 2 பேரும், ஓமந்தூரார் மற்றும் இஎஸ்ஐயில் தலா ஒருவரும் என 7 பேர் உயிரிழந்தனர்.

பீர் தர மறுப்பு ! நண்பன் குத்திக்கொலை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்