[X] Close

“ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரிய வைரஸ் கொரோனா” - விஜயபாஸ்கர் பேட்டி 

தமிழ்நாடு

Coronation-is-a-deadly-virus-that-can-kill-blood-cells--Health-Minister-Vijayabaskar-said
ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரசாக கொரோனா உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று மட்டும் 827  பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆகவே தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது என்றார். 
 
Image
 
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரசாக உள்ளது கொரோனா என்றார். ரத்த செல்களை அழிக்கக் கூடிய வீரியமான வைரசாக உள்ளது என்றும்  அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற உலக நாடுகளிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்றும் ஒப்பிட்டு விளக்கினார். தமிழகத்தைப் பொறுத்தவரை உயிரிழப்பின் விகிதம் 0.74 சதவிகிதம் உள்ளதாகக் கூறினார். 
 
Image
 
தொடர்ந்து பேசிய அவர், அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,548 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 145 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  பிளாஸ்மா சிகிச்சை மூலம் 7 பேர் குணமடைந்துள்ளனர். 
 
Image
 
சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.   இதனிடையே சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் பயணித்த 56 பேரில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  அந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மீதமுள்ள 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார். 
 

Advertisement

Advertisement
[X] Close