Published : 28,May 2020 03:04 AM

கொரோனா: அமெரிக்காவில் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு

covid-19-affected-world-wise-record-announcement

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,89,560 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,57,432 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,97,605 ஆக உள்ளது.

Clusters stabilising gradually, says official as Chennai adds 509 ...

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,107ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,45,803 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,130 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,53,566 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துர்க்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Image

இந்தியாவை பொருத்தவரை கொரோனா உயிரிழப்பில் 10-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,086 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,534 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,749 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 85,803 ஆக உள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்