[X] Close

முதல்வர் கனவு ஸ்டாலினை துன்புறுத்துகிறது: ஜெயக்குமார் கருத்து

CM-dream-disturbed-Mk-Stalin-s

முதலமைச்சர் கனவு மு.க.ஸ்டாலினை துன்புறுத்துகிறது. அதனால்தான் அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அவர் தீவிரமான முயற்சி செய்கிறார் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், “திட்டமிட்டபடி ஜூலை 1ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். சானிடரி நாப்கின் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது” என்றார். இதன்பின் பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் மீன் வலை, ஜவுளிகளுக்கான சாயங்கள், கையால் செய்யப்பட்ட தீப்பெட்டி, நகைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் ஆட்சி நீடிக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமென்றும் அதை ஸ்டாலின் முடிவு செய்யக் கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 356-ஐப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பதை எதிர்த்தவர்கள். 356-ஐ ஒழிக்க வேண்டும் என கூறியவர்கள், இப்போது அதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்” என்றார்.


Advertisement

முதல்வர் ஆக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனது அவரை தூங்கவிடாமல் துன்புறுத்துவதாகவும், அதனால்தான் ஆட்சியை கலைக்க தீவிரமாக முயற்சி செய்வதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close