Published : 18,Jun 2017 12:24 PM

புதுச்சேரியில் முழு நேரம் பணிபுரியும் ஆளுநர் கிடைத்துள்ளார் - கிரண் பேடி

Pudhucherry-Governor-Kiran-Bedi-work-full-time-for-people

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு நீண்ட காலத்துக்கு பின் முழு நேரம் பணிபுரியும் ஆளுநர் கிடைத்துள்ளார் என, அம்மாநில ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தனது பணியின் இயல்புக்கு ஏற்ப துணைநிலை ஆளுநரின் பொறுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், தான் துணைநிலை ஆளுநராகவும், நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மக்களின் குறைகளைக் கேட்டு, கவனம் தேவைப்படும் இடங்களுக்கு கள ஆய்வுக்கு செல்வதாகவும், ஊழல், முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை விசாரணைக்காக மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாகவும் கிரண் பேடி கூறியுள்ளார். எனது நோக்கத்தை யாராவது தவறாக எடுத்துக் கொண்டால் அதற்காக வேதனைப்படுவதாகவும், புதுச்சேரியில் இருக்கும் கடைசி நாள் வரை சேவை புரிவேன் என்றும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்