[X] Close

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?

Mk-stalin-condemns-on-rk-nagar-money-issue-on-edappadi-palanisamy

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது கண்டத்திற்குரியது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இந்த விவகாரம் தொடர்பாக வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்றுள்ள தகவலை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது, தெரியவந்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன பின்னரும், வழக்குப்பதிவு செய்யப்படாதது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மூர்க்கத்தனமாக அவமதிக்கும் செயலாகும் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யத் தடையாக இருப்பது யார் என்று அவர் வினவியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற இனியும் தவறினால், திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close