சாலையில் இறந்து கிடந்த சிறுத்தைப் பூனை - வனத்துறை விசாரணை

சாலையில் இறந்து கிடந்த சிறுத்தைப் பூனை - வனத்துறை விசாரணை
சாலையில் இறந்து கிடந்த சிறுத்தைப் பூனை - வனத்துறை விசாரணை

கொடைக்கானல் டிப்போ பகுதியில் உள்ள தெரு ஒன்றில் அரியவகை சிறுத்தை பூனை ஒன்று இறந்த நிலையில் வனத்துறையால் மீட்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச் சரணாலயத்திற்குள் எண்ணற்ற அரியவகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.அதில் குறிப்பாகக் குடியிருப்புகளுக்கு அருகே அடிக்கடி தென்படும் வனவிலங்கான காட்டுப்பூனை வகையைச் சேர்ந்த சிறுத்தைப் பூனை உள்ளது. இது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கோழிகள், வனப்பகுதிகளில் உள்ள சிறு முயல்களை வேட்டையாடி உண்ணும் வழக்கம் கொண்டது.

இவ்வகை சிறுத்தைப் பூனை ஒன்று, டிப்போ என்ற பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இறந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து நிகழ் விடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பூனையை மீட்டனர். மேலும் பூனை இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com