Published : 18,Jun 2017 05:26 AM

மாட்டிறைச்சி கிடையாதா? திருமணத்தை நிறுத்தியது மணமகன் குடும்பம்!

Marriage-stopped-in-UP-for-Beef-Not-served

விருந்தில் மாட்டிறைச்சி பரிமாற முடியாது என்றதால், திருமணம் நின்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்புர் மாவட்டத்தில் உள்ளது தரியாகர் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள இரண்டு குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக மணமகள் வீட்டில் வரதட்சணை பேசப்பட்டது. திருமண விருந்தாக மாட்டிறைச்சியும் மணமகனுக்கு காரும் கேட்டனர். ஆனால், மாட்டிறைச்சி கொடுக்க முடியாது என்று மணமகள் வீட்டார் கூறினர். இதை ஏற்காத மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். 
இதுபற்றி மணமகள் வீட்டார் போட்வாய் போலீசில் புகார் செய்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘மாட்டிறைச்சியும் காரும் கேட்டனர். இரண்டும் தர முடியாது என்று கூறிவிட்டோம். மாட்டிறைக்கு அரசு தடைவிதித்துவிட்டது. பிறகு நாங்கள் எப்படி மாட்டிறைச்சி விருந்து வைக்க முடியும்?’ என்று கூறினர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்