தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 569 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 846 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 94 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.