தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கேப்டன்சி ஒன்றுபோலவே இருப்பதாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் சக வீரர்களோடு உரையாடி மகிழ்கின்றனர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உரையாடும்போது தோனி பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. அதற்கு "சின்ன தல" சுரேஷ் ரெய்னா விதிவிலக்கல்ல.
ஸ்போர்ட்ஸ் ஸ்கிரீன் என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா "தோனியைப் போலவே கேப்டன்சியில் ரோகித்தும் செயல்படுகிறார். தோனி எப்படி வீரர்களை உற்சாகப்படுத்துவாரோ, ஊக்கப்படுத்துவாரோ அதைப் போலவே ரோகித்தும் செயல்படுகிறார். இதுபோன்ற ஊக்கப்படுத்தலே வீரர்களைச் சிறப்பாக விளையாடத் தூண்டும். இந்த விஷயம்தான் ரோகித்திடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்றார்.
இதுகுறித்து மேலும் தொடர்ந்த அவர் " புனே அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மேற்கொண்ட சில நகர்வுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆட்டத்தின் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ரோகித் எடுத்த முக்கிய முடிவுகள் அற்புதமானவை. இதனால்தான் அவர் 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை" என்றார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?