நாமக்கல்லில் இருந்து பீகார் மாநிலத்திற்கு நடந்துச் சென்ற 22 வடமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
நாமக்கல் அடுத்த மரூர்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 144 தடை உத்தரவு காரணமாக தொழிற்சாலை செயல்படாமல் வந்தததால் கடந்த ஒரு வாரமாக அவர்களுக்கு உணவு மற்றும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து நிறுவனத்தில் பணிபுரிந்த 22 வடமாநில தொழிலாளர்கள் கால் நடையாக தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்குச் செல்ல முடிவெடுத்தனர்.அதன்படி நேற்று இரவு மரூர்பட்டியில் இருந்து நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பீகார் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா?: கனிமொழி
இது குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் காவல்துறை ஆய்வாளர் கைலாசம் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று நாமக்கல் அடுத்த பொம்மை குட்டைமேடு அருகே நடந்து சென்ற வடமாநிலத் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி, தனியார் இடத்தில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதுடன் அவர்களை ஒரு சில நாட்களில் தமிழக அரசின் சார்பில் அவர்களது சொந்த மாநிலத்திற்கு ரயில் மூலம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்