Published : 22,May 2020 01:49 AM
பூவிருந்தவல்லி நகரில் நள்ளிரவில் மின் வெட்டு - மக்கள் கடும் அவதி

பூவிருந்தவல்லி நகரில் நள்ளிரவில் மின் வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
உலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழைப் பெய்து வருகிறது. ஆனால் சென்னையைப் பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு பூவிருந்தவல்லி நகர் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் தி.நகரிலும் இரவு 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனிடையே கொரோனா காலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.