[X] Close

பழைய டேட்டா, பாக்.கிற்கு சாதகமா இல்லையே!

india-vs-pakistan-match-fans-are-confident-that-India-will-win

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த அணி, இந்தியாதான் என்பதால் இன்று நடக்கும் போட்டியிலும் இந்தியாவே வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டி ஒன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க இருப்பதால் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஐ.சி.சி. தொடரில் முதன்முறையாக விராத் கோலியின் தலைமையில் களம் இறங்கியுள்ள இந்திய அணி, அவரது தலைமையில் இதுவரை 24 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 19 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
தோனி கேப்டன் பொறுப்பேற்ற பின் பங்கேற்ற முதல் கிரிக்கெட் தொடர், 2007-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பைதான். அதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது. அந்த வரிசையில் கோலியும் இணைவார் என்று ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும். 


Advertisement

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவுக்கு, இதுதான் மிகப்பெரிய தொடர். அவர் தலைமையில் 8 போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான் 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த அணி, இந்தியா தான். 28 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 7-ல் தோல்வி அடைந்திருக்கிறது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. அதிக தோல்விகளை தழுவிய அணி எது என்று பார்த்தால் அது பாகிஸ்தான். அந்த அணி 22 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றிபெற்றுள்ளது. 12-ல் தோல்வியை சந்தித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close