Published : 21,May 2020 11:13 AM

சென்னையில் 134 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று !

134-Pregnant-women-are-corona-positive-in-Chennai

சென்னை மருத்துவமனைகளில் உள்ள 134 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 743 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்திருக்கிறது.

image

சென்னையில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 5,88 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 7,219 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும் 87 பேர் பலியாகியுள்ளனர்.

image

இந்நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 134 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 34 பேரும், கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 23 பேரும், ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் 47 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்