Published : 18,Jun 2017 02:10 AM
ஜெயிக்கப் போவது ரன் மழையா, பாயும் பந்து வீச்சா?

சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டி ஒன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க இருப்பதால் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த அணி இந்தியாதான். நான்கு ஆட்டங்களில் 1098 ரன்கள் குவித்திருக்கிறது. பாகிஸ்தான் அணி 735 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. இதனால் பேட்டிங்கில் யார் கிங் என்பது தெரியும். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அதிக விக்கெட்டுகளை எடுத்தது பாகிஸ்தான் அணிதான். 4 போட்டிகளில் 31 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறது. இரண்டாவது இடத்தில்தான் இந்தியா (29 விக்கெட்டுகள்) இருக்கிறது.
இதனால் இன்றைய போட்டியில் ஜெயிக்கப் போவது, இந்தியாவின் ரன் மழையா, பாகிஸ்தானின் பந்து வீச்சா என்பதே பேச்சாக இருக்கிறது.