[X] Close

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்

3-players-have-played-int-l-cricket-for-both-India--Pakistan

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்காகவும் 3 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 


Advertisement

பிரிட்டிஷ் ஆட்சியில் ஒன்றாக இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 1947ல் விடுதலை பெற்றன. விடுதலைக்கு முன்னர் இந்திய அணிக்காக விளையாடிய அப்துல் கார்தர், குல் முகமது மற்றும் அமீர் இலாஹி ஆகியோர் விடுதலைக்குப் பின்னர் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர். 

அப்துல் கார்தர்: 


Advertisement

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய அப்துல் ஹபீஸ் கார்தர், சுதந்திரத்துக்கு பின்னர் 1952-53 சீசனில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கினார். இடது கை பேட்ஸ்மேனான அவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி, லாலா அமர்நாத் தலைமையிலான இந்திய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டெல்லி மற்றும் மும்பையில் நடந்த முதல் மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை வென்றது. லக்னோவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அப்துல் கார்தர் தலைமையிலான பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான் அணியின் முதல் கேப்டனான அப்துல் காதர், அந்நாட்டு அணிக்காக 1948 முதல் 1952 வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார். 

குல் முகமது: 


Advertisement

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 17 வயதில் அறிமுகமான குல் முகமது, விஜய் ஹசாரேவுடன் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 577 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். சுமார் பத்தரை மணிநேரங்கள் பேட்டிங் செய்த அவர், 288 ரன்கள் குவித்தார். இந்த பாட்னர்ஷிப் அன்றைய காலகட்டத்தில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் உலக சாதனையாக இருந்தது. இந்திய அணிக்காக 1946ம் ஆண்டு முதல் 1955ம் ஆண்டு வரை விளையாடிய குல் முகமது, பாகிஸ்தான் அணியின் முதல் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டுக்கு எதிராக விளையாடினார். 1956-57 சீசனில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பாகிஸ்தான் அணி சார்பாக குல்முகமது களமிறங்கினார். 

அமீர் இலாஹி: 

லாகூரில் பிறந்த அமீர் இலாஹி, ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 14 வீரர்களில் ஒருவராவார். இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர், பாகிஸ்தான் அணிக்கு 1952-53 சீசனில் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர், அந்த அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  
 


Advertisement

Advertisement
[X] Close