கொரோனா தொற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியர்களை பாதுகாக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை கொண்டு 11 சிறப்பு மருத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
1. டயாலிசிஸ்/ உடலுறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்குகான குழு
2. நீரிழிவு நோயாளிகளுக்கான குழு
3. இரத்த கொதிப்பு நோயாளிகளுக்கான குழு
4. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கான குழு
5. கர்ப்பிணி தாய்மார்களுக்கான குழு
6. குழந்தைகள் மற்றும் இரத்த உறைதல் நோயாளிகளுக்கான குழு
7. இருதய நோயாளிகளுக்கான குழு
8. மூத்த குடிமக்களுக்கான குழு
9. ஆஸ்துமா, மூச்சுத்திணறல், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு
10. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டர்களுக்கான குழு
11. மனநலம் காப்பதற்கான குழு
கொரோனா தொற்றிலிருந்து சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், அவர்களுக்கு எவ்வாறு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், யோகா பயிற்சிகள், ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிர்ந்து அதற்கான ஆலோசனைகளை வழங்குவது, அரசின் டெலிகன்சல்டேசன் மற்றும் ஆரோக்கிய சேது போன்ற செயலிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறப்பு குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?