Published : 19,May 2020 04:54 PM

ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கம் - இந்திய ரயில்வே அறிவிப்பு

Railway-to-run-200-trains-from-June-1

ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 ரயில்கள் முதல்கட்டமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்கள் ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்கள்தான். சிறப்பு ரயில்கள் இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்