தமிழகத்தில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,488 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
செங்கல்பட்டு - 22, கடலூர் - 2, திண்டுக்கல் - 3, கள்ளக்குறிச்சி : 11, காஞ்சிபுரம் - 5, கன்னியாகுமரி - 5, கரூர் - 6, நாகை - 1, ராமநாதபுரம் - 2, ராணிப்பேட்டை - 1, தென்காசி - 2, தஞ்சை - 3, தேனி - 1, திருவள்ளூர் - 8, தூத்துக்குடி - 6, நெல்லை - 20, விருதுநகர் - 1 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இதுதவிர விமான நிலையம் மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 36 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 7,466 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும் 84 பேர் பலியாகியுள்ளனர்.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்