Published : 19,May 2020 02:33 PM

ஐந்து சூறாவளிக்குச் சமமானது Amphan அதித் தீவிர புயல் !

Amphan-super-cyclone-equals-to-many

மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நாளை கடக்கவுள்ள Amphan அதித் தீவிர புயல் 5 சூறாவளிகளுக்குச் சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயகக், மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். முன்னதாக, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் Ampha புயலை எதிர்கொள்வதுக் குறித்த அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

image

 Amphan அதித் தீவிர புயல் மேற்கு வங்க கடற்கரையில் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மிகக் கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்தப் புயலானது, 1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்த சூப்பர் புயலுக்குப் பின்னர் வங்காள விரி குடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயல் என்று கணிக்கப்பட்டுள்ளது.

image

 இது குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி பேசிய அவர், "மேற்கு வங்க மக்கள் நாளை காலை 11 மணி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முகாமில் இருப்பவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்