[X] Close

இந்தியா -பாகிஸ்தான் போட்டி: பயிற்சியின் போது காயமடைந்த அஸ்வின்

R-Ashwin-suffers-knee-injury-scare

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. 


Advertisement

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோருடன் பீல்டிங் பயிற்சியில் அஸ்வின் ஈடுபட்டிருந்தார். வலதுபுறமாக கேட்ச் ஒன்றினைப் பிடிக்கப் பாய்ந்த அஸ்வின், முழங்காலிட்டு தரையில் சாய்ந்தார். இதனால் பயிற்சியில் இருந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஓய்வெடுத்த அஸ்வின், அதன் பின்னர் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டார். அஸ்வினுக்கு பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை என்றும், பாகிஸ்தானுக்கு எதிரான நாளைய இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close