பொதுமுடக்க காலத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கட்டாயம் முழு சம்பளம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாதச் சம்பளத்திற்கு பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அவர்களுக்காக சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக, நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் தர வேண்டும் என உத்தரவிட்டது. அதேசமயம் நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக 3 மாதங்களுக்கான இ.பி.எஃப் தொகையை மத்திய அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. அண்மையில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், மேலும் 3 மாதங்கள் இ.பி.எஃப் தொகையை மத்திய அரசு செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் கட்டாயம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக பொருளாதார செய்தி வலைத்தளமான 'Business Standard' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பொதுமுடக்க புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின் படி, நிறுவனங்கள் பொதுமுடக்கம் காலத்தில் ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயம் சம்பளம் வழங்க வேண்டும் என கடந்த மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2005ஆம் ஆண்டு பேரிடர் கால நிர்வாக சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், மக்கள் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே செல்லக்கூடாது என்ற நடைமுறையில் மட்டும் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட, கட்டாயம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக நிறுவனங்கள் தரப்பிலிருந்து மறுப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊதியம் வழங்குமாறு நிறுவனங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதன் காரணமாகவே தற்போது புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'