[X] Close

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: வரலாறு யார் பக்கம்?

India---Pakistan-match-history

 


Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைத்தான் உலக அளவில் அதிகம் பேர் பார்ப்பார்கள். கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி இது. ஆனால் களத்தில் உண்மையான போட்டி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையேதான் இருக்கப் போகிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அவர்களை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே பெரும்பாலான ஆட்டத்தை முடித்துக் கொடுத்துவிட்ட நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செயல்பட போதுமான களம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் நாளைய போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக கவனம் பெறுவார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கிறார்கள். 


Advertisement

ஐசிசியால் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி 2 முறை ஒருநாள் உலகக் கோப்பை, ஒருமுறை டி20 உலகக் கோப்பை மற்றும் 2 முறை சாம்பியன்ஸ் கோப்பை உள்பட 5 முறை வென்றுள்ளது. சமீபகாலங்களில் குறிப்பாக கடந்த 2007ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணி வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பாக பாகிஸ்தானின் கையே ஓங்கியுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 128 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தான் அணி 72 போட்டிகளிலும், இந்திய அணி 52 போட்டிகளிலும் வென்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. இங்கிலாந்து மண்ணில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 4 முறை மோதியுள்ளன. அதில் 3 முறை இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இறுதிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை இந்திய அணி விளையாடியுள்ள 14 போட்டிகளில் 5ல் வென்றுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை விட இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பானதாகவே இருக்கிறது.
 
சர்வதேச ஒருநாள் தொடர்களைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில், இந்திய அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன.  ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 18 போட்டிகளில் வென்றுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அணி 12 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 4ஆவது முறையாகத் தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். 
 


Advertisement

Advertisement
[X] Close