மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி எவ்வளவு என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய நிதியமைச்சர், “கடந்த ஏப்ரல் மாதத்துக்கான மாநில வரிப்பங்கீடு ரூ. 46, 038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ரூ. 11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு ரூ. 4,113 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 12, 390 கோடி மாநிலங்களுக்கு கடந்த 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டபோதும் மாநில அரசுக்கான நிதியை தொடர்ந்து கொடுத்து வருகிறோம். வருவாய் பங்கீட்டில் மாநிலங்கள் பிரச்னையை சந்தித்து வருகின்றன. மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%ல் இருந்து 5 %ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு உயர்த்தப்படுவதன் மூலமாக ரூ. 4.28 லட்சம் கோடி கூடுதலாக நிதி மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கடன் பெறும் வரம்பு படிப்படியாக உயர்த்தப்படும். ஒரே நாடு, ஒரே ரேஷன் தொழில் தொடங்க ஏதுவான சூழல், மின் பகிர்மானம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தினால் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும், சுயசார்பு திட்டத்தின் முதல் கட்ட அறிவிப்பு ரூ. 5, 94, 550 கோடி எனவும் 2 ஆம் கட்ட அறிவிப்புகளின் மதிப்பு ரூ. 3, 10,000 கோடி எனவும் மூன்றாம் கட்ட அறிவிப்பு ரூ. 1,50,000 கோடி எனவும் நான்காம் மற்றும் 5ஆம் கட்ட அறிவிப்பு ரூ. 48,100 கோடி எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்