Published : 17,May 2020 06:42 AM
உலக சுகாதார அமைப்புக்கான நிதியில் 90%ஐ குறைக்க அமெரிக்கா திட்டம்?

கொரோனா என்ற வார்த்தை முதலில் ஒலிக்கத் தொடங்கிய இடம் சீனா. ஆனால் அங்கு பாதிப்புகள் குறைவு. தொற்று பரவிய அமெரிக்கா
கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து
வருகிறார்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பின் மீது அதிபர் ட்ரம்ப் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். பெரும் தொற்று குறித்து
போதுமான எச்சரிக்கை செய்யவில்லை, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது போன்ற குற்றச்சாட்டுகள் அவை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை பெருமளவுக்கு குறைக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு குறித்து பேசிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு வெளிப்படையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டிருந்தால் கொரோனா இந்த அளவுக்கு பரவி இருக்காது. அது சீனாவுக்கு துணையாக நிற்கிறது. உலக சுகாதார அமைப்பு மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசித்து வருகிறோம்.
தற்போது வழங்கும் நிதியில் 10% மட்டுமே எதிர்காலத்தில் வழங்கலாமா என்று ஆலோசிக்கிறோம். இன்னும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பிற்கு வருடத்திற்கு சுமார்
400மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கி வரும் நிலையில் 90% நிதியை குறைக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 90ஆயிரத்தை தாண்டிய எண்ணிக்கை!!