சென்னையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
சென்னையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என யாரையும் விட்டு வைப்பதில்லை. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் மட்டும் 5,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த 31 வயது ஆண் மருத்துவர், சோழிங்கநல்லூரை சேர்ந்த 35 வயது ஆண் மருத்துவர், கொரட்டூரை சேர்ந்த 45 வயது பெண் மருத்துவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மருத்துவர்களுமே தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com