
டெல்லியில் தினம் தோறும் 225க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
டெல்லியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் 5 மாதங்களில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக 34,039 புகார்கள் வந்துள்ளது என மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் பாலிகிளினிக்குகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாளொன்றுக்கு, 225 க்கும் மேற்பட்டோர் நாய்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும், அதிகம் என கூறப்படுகிறது.
நாய்களுக்கு கருத்தடை செய்வதன் மூலமே அதன் இனப்பெருக்கத்தை தடுக்க முடியும், இதன்மூலம் மட்டுமே நாய் கடிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என கால்நடை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், நாய்களுக்கு கருத்தடை செய்த பின்னர், மீண்டும் அவை அதே பகுதியில் விடப்படுகின்றன. இந்த பிரச்சனை நீண்டுகொண்டே தான் செல்கிறது. நாய்கள் குட்டிபோடுவதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஒழுங்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.