விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தில் முடங்கிய பொருளாதாரத்தை மீட்கப் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். அதற்கான திட்டங்களை மூன்றாவது நாளாக இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இன்றைய தினத்தில் விவசாயம், கால்நடை, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் போன்றவற்றைச் சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விவசாயப் பொருட்களைச் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்படும் எனக் கூறினார். அந்த நிதி மூலம் சிறு, குறு தானியங்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் விளம்பரப்படுத்தப்படும் என்றார்.
மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்களுக்குக் காப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், கொள்முதல், குளிர்பதனக் கிடங்கை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு