[X] Close

இன்று மட்டும் 447 பேருக்கு கொரோனா : தமிழகத்தில் 10,000ஐ நெருங்கும் பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

447-Coronavirus-positive-cases-in-Tamil-nadu-today---363-in-Chennai-only

தமிழகத்தில் இன்று 447 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

கடந்த 10 நாட்களுக்குப் பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 எண்ணிக்கைக்குக் கீழ் வந்துள்ளது. தற்போது வரை 66 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 363 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 2,240 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close