Published : 14,May 2020 03:52 AM
இந்தியா: 78 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் 44, 29,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,98,165 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 16,58,995 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமாகியுள்ளனர். 24,72,075 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 51 நாட்கள் ஆகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003 ஆக உள்ளது. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,549 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,235 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3722 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 25,922 பேரும், குஜராத்தில் 9267 பேரும், தமிழகத்தில் 9227 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.