Published : 13,May 2020 03:55 AM

இரவு முழுவதும் கனமழை: ஆர்ப்பரித்து கொட்டும் குற்றாலம்!!

Rain-increases-water-flow-in-Courtallam-water-falls

(கோப்புப் படம்)

குற்றாலம் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த அதிக மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ளது குற்றால அருவிகள். அங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் இந்த மூன்று மாதங்களும் சீசன் தொடங்குவது வழக்கம்.

image

(கோப்புப் படம்)

இந்த நாட்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். நேற்று இரவு தென்காசி குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகளுக்கு குற்றால அருவியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

 செங்கல்பட்டு : கொரோனா சிகிச்சையில் இருந்து தப்ப முயன்ற நபர் உயிரிழப்பு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்