மும்பையிலிருந்து தனது உறவினர் வீட்டுக்கு சாலை வழியே பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளி கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
மும்பை புறநகரில் உள்ள கல்யாண் நிறுவனத்தில் பணிபுரிந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ராம்தாஸ். ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். ஆகவே இவர் கடந்த வாரம் மும்பையிலிருந்து 350 கி.மீ தூரத்தில் ஜல்கான் பகுதியிலுள்ள அவரது சகோதரரின் இருப்பிடத்திற்கு நடந்தே பயணித்துள்ளார். சாலையில் பயணித்த இவர் மீது கடந்த புதன்கிழமை இரவு கார் ஒன்று மோதியுள்ளது. மும்பையிலிருந்து 70 கி.மீட்டர் பயணித்த நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இன்னும் அவர் 300 கி.மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டி இருந்தது.
இந்நிலையில் அவர் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த 12 மணிநேரம் கழித்து அதாவது அடுத்த நாள் ஷாஹாபூர் அருகே என்டிடிவி நிருபர் அவரைக் கண்டுள்ளார். அப்போது, ராம்தாஸ் முகத்தில் ஒரு ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் அவர் இரத்தக் காயத்துடன் இருந்துள்ளார். உடனே மருத்துவ உதவி கொடுக்கப்பட்டுள்ளது. உணவும் அளித்துள்ளனர்.
ராம்தாஸ், இது குறித்து "என்னிடம் பணம் இல்லை, அதனால் பயணம் செய்ய முடியவில்லை. என்னிடம் ஒரு தொலைபேசி கூட இல்லை" என்று கூறியுள்ளார். இந்நிலை, ராம்தாஸை மீண்டும் அதே சாலையில் அவரை என்.டி.டி.வி குழுவினர் 5 நாள் கழித்துக் கண்டுள்ளனர். அவர் ஒரு டிரக் டிரைவரிடம் பேசி நாசிக் வரை பயணிக்க உதவிக் கோரியுள்ளார். அவரும் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!