ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற பல்லாலதேவா வேடத்தின் மூலம் மிரட்டியவர் நடிகர் ராணா டகுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். வன வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இதே இயக்குநர் எடுத்த ‘கும்கி’ திரைப்படம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆக அமைந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகன் ராணா டகுபதி, அவரது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆகவே அந்தப் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ராணா அவரது பதிவில், ‘அவள் காதலுக்கு சம்மதம்’ கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காதலியின் பெயரை மிஹீகா பஜாஜ் என்று கூறி ஹேஷ்டேக் ஆக பயன்படுத்தியுள்ளார். இப்படத்தில் இருவரும் புன்னகையுடன் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
பொங்கலுக்கு திரைக்கு வரும் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த அறிவிப்பை ராணா வெளியிட்டவுடன் அவரது நண்பர்கள், திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். குறிப்பாக சமந்தா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் ராணாவை வாழ்த்தியுள்ளனர்.
மிஹீகா பஜாஜ், ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மும்பையை பூர்வீகமாக கொண்ட மிஹீகா, ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணா டகுபதியின் வருங்கால மனைவி குறித்த கூடுதல் விவரங்களுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்