[X] Close

எழும்பூர் மருத்துவமனையில் 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா !

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Egmore-hospital-pregnant-women-tested-with-corona-positive

எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 கர்ப்பிணிகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

image

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

இதில் சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 3,839 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை 18 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது.

image

இவர்களில் 18 பேருக்குப் பிரசவம் நடைபெற்று தாய் சேய் நலம். மேலும் 8 பேர் கர்ப்பிணிகளுக்கு இன்னும் சில தினங்களில் பிரசவம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close