[X] Close

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் புகைப்படங்களைப் பதிவிட நீங்கள் தயாரா?

இந்தியா,கொரோனா வைரஸ்

Share-innovative-stories-of-such-champions-using--CoronaWarriorsIndia-

 


Advertisement

 

 


Advertisement

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் கதாநாயகர்களின் கதைகளை #CoronaWarriorsIndia ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிடுமாறு நிதி ஆயோக் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிரப் பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளான சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்டவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது


இந்நிலையில் சில இடங்களைத் தவிர்த்து பெரும்பான்மையான பகுதிகளில் சமூக இடைவெளியை மக்கள் தீவிரமாகக் கடைப்பிடித்தனர்.இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வரிசையில் சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தம் மாவட்ட ஆட்சியர் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் பால் வியாபாரி ஒருவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பாலை வாடிக்கையாளருக்குக் குழாய் வழியாக வழங்கினார்.


Advertisement

 


இந்தப் புகைப்படமும் சமூகவலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் இந்தப் புகைப்படத்தை தற்போது நிதி ஆயோக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. அதில் “பால் வியாபாரி ஒருவரை ஒருவர் தொடாத வண்ணம் பாலை வாடிக்கையாளருக்கு வழங்கும் புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளார். அவர் தனது வாடிக்கையாளருக்கும் அவருக்கும் இடையில் சமூக இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளது. மேலும் இதைப் போன்றவர்களின் கதைகளை #CoronaWarriorsIndia என்ற ஹேஷ்டாக்கின் கீழ் பதிவிடுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


Advertisement

Advertisement
[X] Close