[X] Close

சச்சினைப் பிடிக்குமா? கோலிப் பிடிக்குமா? - முன்னாள் பீல்டர் கைப் விளக்கம்

இந்தியா,விளையாட்டு,கொரோனா வைரஸ்

Like-Sachin--Do-you-like-the-goalie----Former-Fielder-Guy-illustration


Helo Live-வில் முதல் முறையாக முன்னாள் பீல்டர் கைப் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்க்கலாம்.


Advertisement

1. கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் சொல்லும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். கோவிட் 19 நிலைமை மிகவும் வருத்தமாக இருக்கிறது.

2. ஆரம்பக் காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது தந்தையும் கிரிக்கெட் விளையாடினார். அவரை நான்  பின்தொடர்ந்தேன். ஒரு சிறிய ஊரிலிருந்து வந்த பையன் என்பதால், நான் இந்திய அணிக்காக விளையாட விரும்பினேன். எனது பீல்டிங் திறன்களால் மக்கள் என்னைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள்.


Advertisement

3. எனது பீல்டிங்கிற்கு இந்திய அணியில் மரியாதை கிடைத்தது, சச்சின், கங்குலி ஆகியோர் நான் என்ன செய்தாலும் என்னை ஊக்குவித்தனர்.

4. மற்றவர்களைப் பார்த்து எதற்காகவும், எப்போதும் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். வெற்றியைப்பெற உங்களது கிரிக்கெட்டை விளையாடுங்கள்.

image


Advertisement

5. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேனுடன் நிறையப் பேசுவேன். அவர் என்னை ‘பஸ் டிரைவர்’ எனக் கூறினார். பஸ் டிரைவராக இருப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என அவருக்கு நான் பதிலளித்தேன்.

6. அஜய் ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கைஃப் ஆகியோரில் சிறந்த பீல்டர் ஜடேஜா. அவர் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருந்தார். அசாருதீனும் நல்ல பீல்டர். ராபின் சிங்கும் நல்ல பீல்டர், ஃபினிஷர். தற்போது, விராட் ஒரு நல்ல பீல்டர். டிவில்லியர்ஸ் அற்புதமாக டைவிங் செய்கிறார்.

7.ஹர்திக் பாண்டியா ஒரு நல்ல வீரர். அவர் தனது உடற்தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்ததால், ஆல்ரவுண்டராக சிறப்பாகச் செயல்பட முடிகிறது.

8.சச்சின் vs கோலி இருவரில் பிடித்த பேட்ஸ்மேன் சச்சின் தான். சச்சின் எனது ரோல் மாடல். நான் அவருடைய ரசிகன்.

9.கங்குலி / டிராவிட் / கும்ப்ளே / தோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் கங்குலி.

image

10. ஜாகீர் கான் / ஸ்ரீநாத் / கபில் தேவ் / இஷாந்த் ஷர்மா ஆகியோரில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்.

11.அனில் கும்ப்ளே/ ஹர்பஜன் சிங் ஆகியோரில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே.

12. கிரேக் சேப்பல் / ஜான் ரைட் ஆகியோரில் சிறந்த பயிற்சியாளர் ஜான் ரைட்.

13.கிரெக் சேப்பல் சிறந்த பேட்டிங் திறன்களைக் கொண்டிருந்தார். பேட்ஸ்மேன்களுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்கள் அவரைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், சேப்பலுக்கு நான் எனும் அகங்காரம் (Ego) இருந்தது.


Advertisement

Advertisement
[X] Close