[X] Close

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: உச்சத்தில் விளம்பர கட்டணம்

TV-ad-rates-rocket-ahead-of-India--Pakistan-final

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மூலம் கண்டுகளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், போட்டிக்கான விளம்பர கட்டணம் 10 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் போது ஒளிபரப்ப 30 விநாடிகள் கொண்ட விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறுதிப் போட்டியின்போது இந்த தொகை ஒரு கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கிரிக்கெட் உலகின் பரம வைரிகளாகக் கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி உலக அளவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் முதல் 6 இடங்களுக்குள் இடம் பெற்றது நினைவுகூரத்தக்கது. கடந்த 2015ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகள் மோதிய போட்டிக்கு இந்த பெருமை கிடைத்தது. சாம்பியன்ஸ் கோப்பை லீக்கில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை உலக அளவில் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் தொலைக்காட்சிகளில் பார்த்ததாக பார்க் இந்தியா (BARC India) அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.


Advertisement

Advertisement
[X] Close