Published : 03,Jan 2017 03:04 AM

ஜன.4 முதல் 9 வரை ஆலோசனை... நிர்வாகிகளுக்கு சசிகலா அழைப்பு

Sasikala-Calling-party-officials

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். தொகுதி வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‌மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்