Published : 08,May 2020 01:00 PM

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா : சென்னையில் மட்டும் 399 பேர்!

600-Coronavirus-positive-cases-on-today-only-in-Tamil-Nadu---Vijayabaskar

தமிழகத்தில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

image

அதன்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 405 ஆண்கள் மற்றும் 195 பெண்கள் என மொத்தம் 600 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது.

image

அத்துடன் 1605 பேர் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் இதுவரை தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

இன்று மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் 40  பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்