Published : 16,Jun 2017 12:23 PM

மும்பை குண்டுவெடிப்பு - ஒரு ரீ-கேப்

After-24-Years-Mumbai-blast-accused-got-a-judgement-from-TADA-Court

மும்பை தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்று 24ஆண்டுகள் முடிந்தநிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 6பேர் குற்றவாளிகள் என சிறப்பு தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கடந்துவந்த பாதை.............

மார்ச் 12, 1993 - மும்பையில் 13இடங்களில் குண்டுவெடித்தன, 257பேர் பலி.

ஏப்ரல் 19, 1993 - ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததற்காக நடிகர் சஞ்சய் தத் கைது.

ஏப்ரல் 28, 1993  -  ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததை சஞ்சய்தத் ஒப்புக்கொண்டார்.

மே 5, 1993 - மும்பை நீதிமன்றம் சஞ்சய்தத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நவம்பர் 4, 1993 - சஞ்சய்தத் உள்பட 189பேர் மீது 10ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

நவம்பர் 19, 1993 - சிபிஐ-யிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

ஏப்ரல் 1, 1994  - நகர நீதிமன்றத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த தடா நீதிமன்றம் மத்திய சிறைச்சாலைக்குள் மாற்றப்பட்டது.
 
ஏப்ரல் 10, 1994 - வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 189பேரில் 26பேர் விடுவிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 19, 1994 - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடங்கியது.

ஜூன் 30, 1994 - முகமத் ஜமீல், உஸ்மான் ஜஹான்கான் இருவரும் அப்ரூவராக மாறினர்.

ஜூலை 4, 1994 - தடா நீதிமன்றம் சஞ்சய் தத் ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய உத்தரவிட்டது.

அக்டோபர் 14, 1994 - உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்திற்கு ஜாமீன் வழங்கியது.

மார்ச் 29, 1996 - பிரமோத் தத்ராம் கோடே சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

பிப்ரவரி 20, 2003 -  தாவூத் கூட்டாளி இஜாஸ் பதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மார்ச் 20, 2003 - முஸ்தபா தோஸா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜூன் 13, 2006 - அபு சலீமின் வழக்கு தனியாக விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

ஆகஸ்ட் 10, 2006 - செப்டம்பர் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜூலை 31, 2007 - ஆயுதம் பதுக்கிய வழக்கில் சஞ்சய் தத்திற்கு 6ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.  

ஜூலை 29, 2015 - வழக்கில் தொடர்புடைய யாக்கூப் மேமன் கருணை மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன.

ஜூலை 30, 2015 - நாக்பூர் மத்திய சிறையில் யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.

ஆகஸ்ட் 2015 - மகளின் அறுவை சிகிச்சை காரணம் காட்டி மனுச் செய்த சஞ்சய் தத்துக்கு 30நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 25, 2016 - புனே ஏர்வாடா சிறையிலிருந்து தண்டனை முடிந்து சஞ்சய்தத் விடுதலையானார்.

மே 29, 2017 - ஜூன் 16ம் தேதி அபுசலீம் உள்ளிட்ட 6பேர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  

ஜூன் 16, 2017 - அபுசலீம், முஸ்தபா தோஸா உள்ளிட்ட 6பேரும் குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்