[X] Close

காசி மீது மேலும் ஒரு பெண் புகார் - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

குற்றம்

pocso-case-filed-against-kasi-nagarcoil

பெண்கள் பலரை ‌ஏமாற்றி நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்த காசி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்‌ளது. மேலும் அவ‌ரது கூட்டாளி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகார் மூலம் நாகர்கோயிலைச் சேர்ந்த காசியின் பாலியல் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். அதன்படி காசி மீது அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பலமாகும் காதல் மோசடி மன்னன் ...


Advertisement

முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா

காசியால் பாதிக்கப்பட்ட பெண்களில் இதுவரை 5 பேர் புகார் அளித்துள்ள நிலையில், அவரது மூன்று நாள் காவல் இன்றுடன் முடிவடைகிறது. அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Advertisement

Advertisement
[X] Close