Published : 16,Jun 2017 11:32 AM

அப்பாடா... தொடங்கியது வடசென்னை படப்பிடிப்பு

Vadachennai-flim-shooting-starts-in-chennai

திட்டமிட்டு பல ஆண்டுகளாகியும் தொடங்கப்படாமல்  இருந்த வடசென்னை படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முன்றாவது படம் இது. ஹேங்ஸ்டர் கதையைக்கொண்ட வடசென்னை படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அதில் கமிட் ஆகியிருந்த சில நடிகர்கள் விலகி விட்டனர். தற்போது ஒருவழியாக வடசென்னை படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தனுஷ் ஹாலிவுட் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.
காசிமேடு பகுதியில் இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் படத்தில் நடிக்க இருந்த விஜய்சேதுபதி விலகியதால் அவருக்கு பதிலாக  இயக்குநர் அமீர் நடிக்க கமிட்டாகியுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்