Published : 06,May 2020 03:20 PM

“பாய்ஸ் லாக்கர் ரூம்” கொடூரம் : சமூகத்திற்கு எச்சரிப்பது என்ன..?

Class-12-Student-Was-Admin-Of--BoisLockerRoom--Instagram-Chat--Arrested

இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு பாலியல் கொடூரங்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. 2012ஆம் ஆண்டு டெல்லி பாலியல் வன்கொடுமை தொடங்கி 2018ஆம் காஷ்மீர் சிறுமி வரை பல்வேறு பாலியல் கொடூரங்கள் இந்தியாவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் தெலங்கானாவில் நடந்த பெண் மருத்துவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை கொலை கூட, இந்தியாவையே அதிர வைத்தது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் போரூர் சிறுமி, பொள்ளாச்சி கொடூரம் என பல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிர்ச்சியளித்துள்ளன.

image

இந்த சம்பவங்களை காணும்போது, இந்த அளவிற்கு இளைஞர்களை வன்மம் அடையச் செய்வதும், இறக்கமற்றவர்களாக மாற்றுவதும் எது ? என்ற கேள்வியை எழுப்புகிறது. தற்போது கூட டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பள்ளியில் படிக்கும் மேல்நிலை மாணவர்கள் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள குரூப் மூலம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வது பற்றி ஆலோசித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமைகள் என்பது இந்தியாவில் நாளுக்கு நாள் கொடூரமாய் சென்றுகொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சமூக வல்லுநர்கள் கூறுவது வளர்ந்து வரும் செல்போன் டெக்னாலஜியும், இண்டர்நெட் தொழில்நுட்பமும் தான். இணையதளத்தில் நல்லவையும், அதைவிட கெட்டவையும் அதிகம் உள்ளன. தற்போதைய காலத்தில் மாணவர்கள் சிறுவயது முதலே செல்போன்களை பயன்படுத்த துவங்குகின்றனர். அவர்கள் பதின்பருவம் அடைந்ததும் கூட்டாக சேர்ந்த இணையத்தில் தேடுவது ஆபாச படங்களைத் தான் என ஆய்வறிக்கைகள் கூறின. இதையடுத்து நூற்றுக்கணக்கான ஆபாச வலைத்தள பக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. ஆனாலும் இன்னும் ஆயிரக்கணக்கில் ஆபாச வலைத்தளங்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றன.

image

அதுமட்டுமின்றி இந்தியாவில் சிறார் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட உளவியல் ஆய்வில், சிறார் ஆபாச படங்களை பார்ப்பதே காரணம் எனப்பட்டது. இதையடுத்து சிறார் ஆபாச படங்களை பார்த்தால் குற்றம் என எச்சரிக்கப்பட்டது. தமிழகத்தில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பகிரந்தவர்கள் மீது கைது நடவடிக்கைகள் பாய்ந்தன.

இந்தக் கொடூரங்கள் போதாதென, பொள்ளாச்சியில் வெளியான சம்பவம் பெண் பிள்ளைகளின் பெற்றோரை அதிர்ச்சியில் தள்ளியது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கொடூரர்கள் அடையாளம் காணப்பட்டனர். பிடிக்கப்பட்டது இந்த ஒரு கும்பல் என்றாலும், இன்னும் வெளியே வராத கொடூரக் கதைகள் எத்தனையோ. இங்கும் செல்போன்கள் தான் பிரச்னையாக இருந்திருக்கிறது.

image

இதுதவிர பல்வேறு இடங்களில் ஃபேஸ்புக் காதல், சமூக வலைத்தளம் மூலம் மோசடி செய்து அழைத்து பாலியல் வன்கொடுமை என பல்வேறு பட்டியல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இவ்வாறாக தற்போதுள்ள காலகட்டத்தில் ஒரு சிறுவன் இளைஞனாக மாறுவதற்குள் அவனைச் சுற்றி செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான வன்மங்கள் வந்துவிடுங்கின்றன. அது அவர்களை வன்முறைவாதிகளாகவும் மாற்றிவிடுகின்றன. இதற்கு தீர்வை வேறு எங்கும் தேட வேண்டாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முறையாக சிறுவயது முதலே கவனித்து வந்தாலும், அவர்களுக்கு பெண்களை எப்படி மதிப்பது, பெண்மையை எப்படி போற்றுவது என சொல்லிக்கொடுத்தாலே போதுமானது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்..

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - பெங்களூருவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேல் வசூல்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்