Published : 06,May 2020 09:27 AM

ஆரோக்யா சேது செயலியில் குறைபாடா ? - மத்திய அரசு விளக்கம்..!

Central-government-explain-about-Arokya-Sethu-app

கொரோனா பரவல் குறித்து அறிந்து கொள்ள உதவும் ஆரோக்யா சேது செயலியில் எந்தவித பாதுகாப்பு மீறலும் இல்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்ய சேது செயலி மூலம் 9 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரான்சை சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியட் ஆண்டர்சன் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக பதிவிட்டிருந்த ஆண்டர்சன், பின்னர் குறைபாடுகள் குறித்து ஆரோக்ய சேது குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

image

இதுகுறித்து மத்திய அரசின் ஆரோக்யா சேது செயலி குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் செயலியை பயன்படுத்தும் எந்தவொரு நபரின் தனிப்பட்ட தகவல்களும் ஆபத்தில் இருப்பதாக நிபுணர்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கள் செயலியை சோதனை செய்து மேம்படுத்துவதாகவும், இதுவரை தகவல்கள் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் கண்டறியப்படவில்லை என உறுதி அளிப்பதாகவும் ஆரோக்ய சேது செயலி குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

image

மக்கள் செல்லும் இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து ஆலோசனைகளை வழங்க ஆரோக்யா சேது செயலி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் எந்தெந்த வயதினருக்கு எந்த நேரத்தில் மதுவிற்பனை?: விவரம்..!