[X] Close

கொரோனாவுக்கு அதிகளவில் பலியாகும் கருப்பின அமெரிக்கர்கள்: ஆய்வில் தகவல்

உலகம்

Afro-Americans-are-died-most-in-corona

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்-க்கு கருப்பின அமெரிக்கர்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எனப்படும் கருப்பின அமெரிக்கர்கள் 13 சதவீதம் பேர் உள்ளனர். கருப்பின அமெரிக்கர்கள் வாழும் பகுதிகளிலேயே அதிக அளவு கொரோனா பாதிப்பு இருப்பது, அமெரிக்காவின் 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

image


Advertisement

அந்நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 100 பகுதிகளை ஒப்பிடுகையில், கருப்பின அமெரிக்கர்கள் அதிக அளவு வாழும் பகுதிகளில் 52 சதவீத நோய் தாக்கமும், 58 சதவீத உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற பகுதிகளை ஒப்பிடும் போது கருப்பின அமெரிக்கர்கள் அதிகளவு வாழும் பகுதிகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை 50 சதவீதம் கூடுதலாக உள்ளது.

image

கொரோனா வைரஸால் அதிக அளவு கருப்பின அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு அவர்களின் உடல்நிலை காரணம் அல்ல என்றும், மாறாக சமூக நிலை உள்ளிட்டவையே காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close