அடக்கொடுமையே! காதலை ஏற்க மறுத்தவர் வீட்டில் இளைஞர் தற்கொலை!
காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணின் வீட்டில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள துவாரகா பகுதியை சேர்ந்தவர் அர்னவ் துக்கல். ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றுபவர் அந்த இளம் பெண். இளம்பெண் மீது அர்னவுக்கு அளவில்லாத காதல். இதைச் சொன்னார் அர்னவ். ஏற்கவில்லை அவர். இருந்தாலும் நட்பாகப் பழகிக்கொண்டிருந்தனர். நேற்று முன் தினம் அதிகாலை 1.30 மணிக்கு வேலை முடிந்து வெளியே வந்தார் அந்தப் பெண். வெளியே தனது காரில் காத்து நின்ற அர்னவ், ‘நான் டிராப் பண்ணுகிறேன்’ என்றார்.’
’என் தோழி வீட்டில் பார்ட்டி, அங்கு செல்கிறேன்’ என்றார் அந்தப் பெண். தானும் வருவதாக அர்னவ் சொல்ல, சரி என்று அழைத்துச் சென்றார் அந்தப்பெண். பார்ட்டியில் கொஞ்சம் குடித்தார். போதை தலைக்கேறியது. காலை வரை பார்ட்டி நடந்தது. முடிவில் எல்லோரும் சென்றுவிட, தனது காரில் அந்தப் பெண்ணை டிராப் பண்ண வந்தார் அர்னவ்.
வீட்டில் அவரை விட்டு செல்வதாகக் கூறிய அர்னவ், அந்தப் பெண்ணின் பின்னாலேயே அவர் வீட்டுக்குச் சென்றார். ‘போதை அதிகமாகிவிட்டது. இப்படியே கார் ஓட்டிச் சென்றால் விபத்து ஏற்படும். அதனால் உன் வீட்டில் தங்கிக் கொள்கிறேன்’ என்றார். சம்மதித்த அந்தப் பெண், இன்னொரு அறையில் அர்னவை படுக்கச் சொன்னார். பிறகு தூங்கிவிட்டார் அந்தப் பெண். திடீரென்று அவருக்கு போன் வந்தது. எடுத்து பேசிவிட்டு, தற்செயலாக அர்னவ் இருந்த அறையை பார்த்தால், அவருக்கு அதிர்ச்சி. கதவு திறந்திருந்தது. ஃபேனில் தூக்கு மாட்டி இறந்திருந்தார் அர்னவ். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அர்னவ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!