Published : 05,May 2020 03:15 AM

பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய புகார்.. காசியை 3 நாட்கள் விசாரிக்க அனுமதி

court--3-days-permission-for-investigate-to-kasi-in-nagarcoil

பெண்களை ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்ததாக கைது செய்யபட்ட இளைஞரை, 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த காசி, தற்போது காவல்துறையின் கஸ்டடியில் இருக்கிறார். அதற்கு காரணம், காசியின் போலியான காதல் விளையாட்டுதான். பார்ப்பதற்கு ஸ்டைலிஷான தோற்றம். சாதுர்யமான பேச்சுத் திறன். சொல்லும் பொய்கள் அனைத்தையும் நம்ப வைக்கும் திறமை. இவைதான் காசியின் மூலதனம் என்கிறார்கள் காவல்துறையினர். இதை வைத்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பயன்படுத்திக் கொண்ட கருவிதான், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள்.

image

அதிகம் படித்து நல்ல பணிகளில் உள்ள பெண்களும், பொருளாதார வசதி இருப்பவர்களும்தான் காசியின் டார்கெட். சமூக வலைதளங்கள் மூலம் நட்பு கொண்டு, நல்லவரைப்போல் நடித்து, அவர்களை காதல் வலையில் வீழ்த்துவது காசிக்கு கைவந்த கலை என்கிறது காவல்துறை. தன்னை நம்பி நேரில் சந்திக்க வரும் பெண்கள் தன்னுடன் நெருக்கமாக இருக்கும்போது செல்ஃபோனில் படமெடுத்துக் கொள்வதுதான் காசியின் அடுத்த வேலை. அதன்பின் அடுக்கடுக்காக பல பொய்களைக் கூறும் அவர், பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்திருக்கிறார்.

image

இப்படியான சூழலில் கன்னியாகுமரி எஸ்.பிக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பிய பெண் மருத்துவர் ஒருவர், காசியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். புகாரின்பேரில், ஏப்ரல் 24ஆம் தேதி காசியை கைது செய்த காவல்துறையினர், செல்ஃபோன், லேப்டாப்களில் இருந்த ஆதாரங்களை வைத்து, அவர் மோசடியில் ஈடுபட்டதை உறுதி செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.

image

இந்நிலையில், காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது. காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் யார்? இக்குற்றத்தைச் செய்ய யாரேனும் உதவியிருக்கிறார்களா? என பல கேள்விகளுக்கு விடையறிய விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது காவல்துறை. இதனிடையே கைகள் இரண்டும் விலங்குகளால்‌ பூட்டப்பட்டிருந்தாலும், நீதிமன்ற வளாகத்திற்குள் காதல் சின்னத்தை காண்பித்துக் கொண்டிருந்தார காசி. அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்